பெரியவடகரை அருகே பைக் மீது லாரி மோதி முதியவர் பலி. Elderly man killed in accident
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவர் இறந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுநிலா காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 68). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் சென்றுவிட்டு மீண்டும் சிறுநிலா நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரியவடகரை அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஜமாலுதீன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ஜமாலுதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜமாலுதீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சித்தேரி பகுதியை சேர்ந்த ரமேசை(45) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி
Elderly man killed, accident
You must log in to post a comment.