Eid al-Fitr in the UAE: 14 places where fireworks will be staged!
ஐக்கிய அரபு அமிரகத்தில் ஈத் அல் பித்ர் முன்னிட்டு வானவேடிக்கை நடைபெறும் 14 இடங்கள் மற்றும் அதன் விபரங்கள்.
ஐக்கிய அரபு அமீரக மக்கள் இன்று (புதன்கிழமை) ஈத் அல் பித்ரைக் கொண்டாடிவருகின்றனர். அதிகமான விடுமுறை காரணமாகப் பலர் வெளிநாட்டிற்குச் சென்று விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர். பலரும் இந்த விடுமுறையை அமீரகத்திலேயே கொண்டாடவும் திட்டமிட்டுள்ளனர்.
அமீரக மக்களுக்காக அபுதாபி மற்றும் துபாயில் 14 வெவ்வேறு இடங்களில் வானவேடிக்கை உட்பட ஏராளமான பொழுது போக்கு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:
அபுதாபி கார்னிச் (Abu Dhabi Corniche)
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரில் மிகவும் பிரபலமான அபுதாபி கார்னிச் பகுதியில் இன்றிரவு (புதன்கிழமை, ஏப்ரல் 10) 9 மணிக்கு வண்ணமயமான வானவேடிக்கைகளை அபுதாபியினர் கண்டு ரசிக்கலாம்.
யாஸ் பே, யாஸ் தீவு (Yas Bay, Yas Island)
அபுதாபியிலுள்ள அழகிய யாஸ் தீவில் அமைந்துள்ள கார்னிச் பகுதியிலும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சரியாக இன்று இரவு (புதன்கிழமை, ஏப்ரல் 10) முதல் ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமை வரை தினமும் இரவு 9 மணிக்கு வானவேடிக்கைகள் நடைபெறும்.
ஹுதைரியாத் தீவு (Hudayriyat Island)
இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 10) இரவு 9 மணிக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இந்த அழகிய கடலோரப் பகுதியில் உள்ளவர்கள் வானவேடிக்கைகளைக் கண்டு களிக்கலாம்.
ஹஸ்ஸா பின் சயீத் ஸ்டேடியம் (Hazza bin Zayed Stadium)
இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 10) இரவு 9 மணிக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இந்த அழகிய கடலோரப் பகுதியில் உள்ளவர்கள் வானவேடிக்கைகளைக் கண்டு களிக்கலாம்.
மதீனத் ஜாயீத் பூங்கா (Madinat Zayed Public Park)
அல் தஃப்ராவில் உள்ள மதீனத் சயீத் பூங்காவில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 10) இரவு 9 மணிக்கு பட்டாசுகளை கொண்டு வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
அல் முகெய்ரா வாட்டர்பிரண்ட் (Al Mugheirah Bay Waterfront)
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் முகெய்ராவில் இன்று இரவு (புதன்கிழமை, ஏப்ரல் 10) இரவு 9 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
காயதி (Ghayathi)
இன்று இரவு (ஏப்ரல் 10, புதன்கிழமை) இரவு 9 மணிக்கு அபுதாபியின் மேற்குப் பகுதியில் உள்ள கயாத்தியிலும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து மோசடி செய்த வழக்குகளில் 494 பேர் கைது
துபாய்
குளோபல் வில்லேஜ் (Global Village)
துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் இன்று இரவு (புதன்கிழமை, ஏப்ரல் 10) முதல் ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை வரையிலும் 200 க்கும் மேற்பட்ட தினசரி கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இரவு 9 மணி வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் (Dubai Parks and Resorts)
துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் பகுதியில் ஈத் அல் பித்ர் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இன்று முதல் 12ந் தேதி வரை நடைபெறுகிறது. வானவேடிக்கை பட்டாசு நிகழ்ச்சி இன்று இரவு மட்டும் நடைபெறும். மேலும் தினசரி லேசர் ஷோக்கள் ஒவ்வொரு இரவும் மூன்று முறை வானத்தை ஒளிரச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் (Dubai Festival City Mall)
துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் உங்கள் மகிழ்ச்சியூட்ட எண்ணற்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இன்று இரவு 8 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
ஹட்டா (Hatta)
நகரத்திலிருந்து வெளியிலுள்ள பகுதிகளுக்கு நீண்ட தூரம் செல்ல நினைப்பவர்கள் ஹட்டா செல்ல ஆசைப்படுவார்கள். அவர்களும் இந்த ஈத் கொண்டாட்ட நிகழ்ச்சியில் வானவேடிக்கை நிழச்சியை கண்டுகளிக்கலாம்.
நீங்கள் ஹட்டாவின் கம்பீரமான மலைகளைப் பார்க்கச் செல்கிறீர்கள் என்றால் இன்று இரவு 8 மணிக்குப் பட்டாசு வானவேடிக்கையைக் கண்டுகளிக்கலாம்.
அல் சீஃப் (Al Seef)
ஈத் அல் பித்ரின் முதல் நாளில் பட்டாசு வானவேடிக்கை பார்க்கத் தவறவிட்டால் மறுதினம் அல் சீஃப் பகுதியில் அவற்றைப் பார்க்கலாம். 11ம் தேதி இரவு 8 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
புளூவாட்டர்ஸ் தீவு (Bluewaters Island)
உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் புளூவாட்டர்ஸில் உள்ள உணவகத்திற்குச் செல்கிறீர்களா? வானவேடிக்கை காட்சிகளை ரசித்தபடி உங்கள் இரவு உணவை எடுத்துக் கொள்ளலாம். ஏப்ரல் 12ம் தேதி இரவு 8 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தி பீச், ஜேபிஆர் (The Beach, JBR)
கடற்கரையில் கொண்டாட்டம் என்பது எப்போதும் சிறப்பு தான். நீங்கள் JBR இல் பட்டாசு சத்தங்களுடன் வானவேடிக்கை பார்க்க ஆசைப்பட்டிருந்தால் தாராளமாகச் செல்லுங்கள். இங்கு ஏப்ரல் 12ம் தேதி இரவு 8 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அமீரக மக்கள் இந்த ஈத் அல் பித்ர் பெருநாளை ஒட்டி தொடர்ந்து ஒன்பது நாள் விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். இது இவ்வாண்டின் மிக நீண்ட விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Eid al-Fitr in the UAE, Tamil UAE News, Dubai Tamil News