UAE-ல் ஈதுல் பித்ர் பெருநாள் விடுமுறை அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈதுல் பித்ர் பெருநாளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 6-ம் தேதி முதல் ரமலான் நோன்பு வளைகுடா நாடுகளில் துவங்கியது. இந்த வருடம் 29 நாட்கள் நோன்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 29 நோன்புகள் மட்டும் இருக்கும் பட்சத்தில் வரும் 4-ம் தேதியும், 30 நாளாக இருந்தால் 5-ம் தேதி ஈதுல் பித்ர் பெருநாளாக இருக்கும்.

இதனையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அரசு விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு ஜுன் 3-ம் தேதி முதல் 6ஆம் தேதி வரையிலும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.

அதே போல அரசு நிறுவனங்கள் நாளை முதல் அதாவது ஜுன் 2-ம் தேதி 8-ம் தேதி வரை விடுமுறை என்று அறிவித்துள்ளது. மீண்டும் 9-ம் தேதி எப்போதும் போல பழைய நேரங்களின் அடிப்படையில் அரசு நிறுவனங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

%d bloggers like this: