Eid Al Adha: Seven Cannon-Firing Locations Announced in Dubai
2024 ஈத் அல் அதா: துபாய் ஏழு பீரங்கிக் குண்டு முழக்க இடங்களை அறிவித்துள்ளது.
ஹஜ் பெ
ருநாள் தொடக்கத்தை அறிவிக்கும் பொருட்டு துபாயில் ஏழு இடங்களில் பீரங்கிகள் முழங்கப்படும் என்று துபாய் போலீஸ் இன்று (சனிக்கிழமை) அறிவித்தது.
“தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பீரங்கி முழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,” என்று தளபதி லெப்டினன்ட் கர்னல் அப்துல்லா தாரிஷ் அல் அமிமி கூறினார்.
பீரங்கிகள் முழங்கப்படும் இடங்கள் — இது காலை 5.45 மணியளவில், தொழுகைகளின் பின்னர் நடைபெறும்:
- ஜபீல் கிராண்ட் மாஸ்க், ஜபீல் (Za’abeel Grand Mosque in Za’abeel)
- உம் சுகீம் ஈத்கா மைதானம்
- நாத் அல் ஹமார்
- அல் பர்ஷா
- நாத் அல் ஷேபா
- அல் பராஹா
- ஹட்டா
பீரங்கி முழக்கம் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும். ரம்ஜான் மாதத்தில், இஃப்தாரை அறிவிக்க குண்டு வெடிக்கப்படுகிறது. ஈத் அல் அதா மற்றும் இத் அல் பித்ர் பெருநாட்களை அறிவிக்கவும் இந்த முழக்கங்கள் செய்யப்படுகிறது.
“இந்த பீரங்கி முழக்கமானது அமீரக சமூக மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது,” என்று லெப்டினன்ட் கர்னல் அல் தமிமி கூறினார்.
Keywords: Cannon-Firing, Dubai tamil news, Tamil news Dubai, Gulf news tamil, Tamil Gulf News
ALSO READ:
துபாய்: ஈத் பெருநாள் இலவச பார்க்கிங் மற்றும் மெட்ரோ நேரங்கள் அறிவிப்பு
பரபரப்புடன் காணப்படும் துபாய் விமான நிலையம்.
அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகை நேரம் அறிவிப்பு