Eid Al Adha Prayer Timing Notification in UAE
அமீரகத்தின் அபு தாபி, துபாய், ஷார்ஜாவில் ஈத் அல் அதா தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு ஈத் அல் அதா முக்கியமான பண்டிகையாகும். இந்த பெருநாளுக்காக இந்த வருடம் அமீரகத்தில் நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது புனித ஆரஃபா தினத்திற்கு பிறகு கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து, தொழுகை செய்து, பண்டிகையை கொண்டாடி மகிழ்வர்.
தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் நான்கு நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை பெறுவார்கள். விடுமுறை ஜூன் 15, சனிக்கிழமை முதல் ஜூன் 18, செவ்வாய்க்கிழமை வரை இருக்கும்.
ஈத் அல் அதா இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் 10ம் தேதியில் அதாவது ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம், முஸ்லிம்கள் தங்களிடமுள்ள சிறந்த உடைகளை அணிந்து, சூரிய உதயத்திற்குப் பிறகு சிறப்பு தொழுகை தொழுவார்கள். இந்த சிறப்பு தொழுகைக்காக பள்ளிவாசல்கள் அல்லது மஸல்லாஹ் எனப்படும் பெரிய திறந்த ஈத்கா மைதானங்களில் தொழுவார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மற்றும் முதியவர்கள் உட்பட பலரும் இந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வார்கள்.
தொழுகை நடைபெரும் இடங்கள் ஃபஜ்ர் (காலை) தொழுகையிலிருந்து திறந்திருக்கும். ஈது தக்பீர் தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகை தொடங்கும் வரை ஓதப்படும்.
அபு தாபி, துபாய், மற்றும் ஷார்ஜாவில் இந்த சிறப்பு தொழுகையின் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபு தாபி:
- அபு தாபி நகரம்: காலை 5:50
- அல் அய்ன்: காலை 5:44
துபாய்: காலை 5:45 (துபாய் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு செயல்பாடுகள் துறையின் அறிவிப்பின் படி)
ஷார்ஜா: காலை 5:44 (ஷார்ஜா இஸ்லாமிய விவகாரங்கள் துறையின் அறிவிப்பின் படி)
ஈத் அல் அதா தொழுகை எப்படி நடத்தப்படுகிறது:
ஈத் அல் அதா தொழுகை ஒரு கூட்டு தொழுகையாகும் மற்றும் இரண்டு ரக்அத்கள் கொண்டது. முதலாவது ரக்அத்தில், இமாம் பல தக்பீர் கூறுவார், பின்னர் ஸூரா ஃபாத்திஹா மற்றும் பிறொரு அத்தியாயத்தை குர்ஆனிலிருந்து ஓதுவார். இரண்டாவது ரக்அத்திலும் மேலும் தக்பீர் கூறப்படும். தொழுகையின் பின்னர், இமாம் இரு பகுதிகளாக சிறப்பு உரையாற்றுவார். முஸ்லிம்கள் உரையை கவனமாகக் கேட்டு, பிறகு தங்களின் அன்புக்குரியவர்களை கட்டி அணைத்து “ஈத் முபாரக்” என்று வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.
Keywords: Eid Al Adha Prayer, Gulf News Tamil, GCC tamil news
ALSO READ:
ஹஜ் யாத்திரிகர்களுக்காக சவூதி அரேபியாவில் பறக்கும் டாக்சி அறிமுகம்
குவைத்: கட்டிடத் தீவிபத்தில் 41 பேர் மரணம், பலர் காயம்
அபுதாபி-திருச்சி இடையே மேலும் ஒரு விமான சேவை
துபாய் விமான நிலையத்தில் ஹஜ் பயனிகளுக்காக சிறப்பு கவுன்டர்கள்