Eid Al Adha Holiday Notification
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனியார் துறைக்கான ஈத் அல் அதா 2024 விடுமுறைகளை அறிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத் அல் அதா விடுமுறை தேதிகளை அறிவித்துள்ளது. விடுமுறை ஜூன் 15 சனிக்கிழமை தொடங்கி ஜூன் 18 செவ்வாய்க்கிழமை முடிவடையும்.
இஸ்லாமிய நாட்காட்டியில் துல் ஹஜ் 9 அன்று, இஸ்லாமியர்களின் புனிதமான நாளான அரஃபா தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. இது ஆங்கில நாட்காட்டியில் ஜூன் 15, சனிக்கிழமைக்கு ஒத்திருக்கிறது.
துல் ஹஜ் 10 முதல் 12 வரை வரும் தியாகத் திருநாளான ஈத் அல் அதாவிற்கு மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆங்கில நாட்காட்டியில் ஜூன் 16 முதல் 18 வரை. பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் இதே தேதிகளில் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 7 வெள்ளிக்கிழமை அன்று அபுதாபியில் பிறை காணப்பட்டதையடுத்து, புதிய இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் 1445 உறுதி செய்யப்பட்டது.
சவூதி அரேபியாவும் ஜூன் 7 ஆம் தேதி பிறை பார்த்தது, அன்று துல் ஹஜ் மாதம் தொடங்குகிறது. சவுதி அரேபியாவிலும் ஈத் அல் அதா ஜூன் 16 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில், ஈத் அல் அதா ஜூன் 17 தேதிஎன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Keywords: Eid Al Adha Holiday Notification, GCC Tamil News, Gulf News Tamil, UAE Tamil News
ALSO READ:
ஈத் அல் அதா விடுமுறையை கொண்டாட எட்டு கடற்கரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹஜ்ஜின் போது சராசரிக்கும் அதிகமான வெப்பம் இருக்கும் என எச்சரிக்கை!