Eid Al Adha 2024: Saudi Arabia Spots Dhul Hijjah Moon
இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ்ஜின் தொடக்க நாளை காண்பதற்காக இன்று பிறையைப் பார்த்ததாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
இன்று ஜூன் 6 வியாழன் துல் காயிதாவின் இறுதி நாள் என்பதையும், ஜூன் 7 வெள்ளிக்கிழமை துல்ஹஜ்ஜின் தொடக்க நாளாகவும் இருக்கிறது. இதன் அடிப்படையில் தியாகப் பெருநாள் என்றும் அழைக்கப்படும் ஈத் அல் அதா ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை (துல் ஹஜ் பிறை10) என்று அறிவிக்கப்பட்டது.
அரஃபா தினமாக, ஈத் பெருநாளுக்கு முந்தைய தினம் அனுசரிக்கப்படும் ஒரு முக்கிய நாளாகும். ஜூன் 15 (துல் ஹஜ் பிறை 9) சனிக்கிழமை அரஃபா தினமாக இருக்கிறது. இந்த நாள் இஸ்லாத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு அரசு பொது விடுமுறை நாட்களின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி அரஃபா தினத்திற்கு (துல் ஹஜ் பிறை 9) ஒரு நாள் விடுமுறையும், ஈத் அல் அதாவுக்கு (துல் ஹஜ் பிறை 10 முதல் 12 வரை) மூன்று நாட்கள் விடுமுறையும் அறிவித்துள்ளது.
”ஈத் அல் அதா” அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிந்து தனது மகனை பலியிட நபி இப்ராஹிம் விரும்பியதை நினைவுகூரும் தினமாகும். இப்ராஹிம் நபியின் இறுதிச் செயலைக் குறிக்கும் சிறப்புத் தொழுகைகள் மற்றும் ஆடு, செம்மறி ஆடு, மாடு அல்லது ஒட்டகம் போன்ற கால்நடைகளை பலியிடுவதை இஸ்லாமியர்கள் கடமையாக இந்த பெருநாளில் செய்து வருவர்.
இதையும் படிக்கலாம்
ஹஜ்ஜின் போது சராசரிக்கும் அதிகமான வெப்பம் இருக்கும் என எச்சரிக்கை!
பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட 220 கார்கள் பறிமுதல்
ஜுன் 1 முதல் யூஸ் அன் த்ரோ பைகளுக்கு தடை
விசிட் விசாவில் கூடுதல் நாள் தங்கினால் அபராதம்
Keywords: Eid Al Adha 2024, Gulf News Tamil, GCC Tamil News