Effective time management

நேரத்தை மிச்சப்படுத்த சில டிப்ஸ்.

175

நேரத்தை மிச்சப்படுத்த சில டிப்ஸ்.

Main principles of Effective time management.

நாம் வெற்றி கொள்ள வேண்டிய இலக்குகளை அடைவதற்கும், உற்பத்தித்திறனை அடைவதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பயனுள்ள நேர திட்டமிடுதல் மிக  முக்கியமானது. உங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிக்க உதவும் சில உத்திகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • தெளிவான இலக்குகளை அமைக்கவும்: Set clear goals

உங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை வரையறுப்பதன் மூலம் தொடங்கவும். இந்தத் தெளிவு உங்கள் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் அதற்கேற்ப நேரத்தை ஒதுக்கவும் உதவும்.

  • முக்கிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்: Prioritize important tasks

எந்தப் பணிகள் மிகவும் முக்கியமானவை என்பதைத் தீர்மானித்து, முதலில் அவற்றைச் சமாளிக்கவும். பணிகளை அவற்றின் அவசரம் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாம் – சுறுசுறுப்பா இருக்க சில டிப்ஸ்..!

  • அட்டவணையை உருவாக்கவும்: Create a schedule

உங்கள் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர நடவடிக்கைகளை காட்டும்படியான அட்டவணையை (Time Table) உருவாக்கி கொண்டு பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். இதற்கு இந்த டிஜிட்டல் உலகில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றன.

  • பணிகளைச் சிறியதாக பிரிக்கவும்: Make tasks into smaller

பெரிய வேலை என்றால் அதில் கைவைப்பதற்கு மலைப்பு உண்டாகும். அதையே கொஞ்சம் கொஞ்சமாக செய்வதற்கு பல வேலைகளாக பிரித்து ஒவ்வொன்றாக எளிதாக முடிக்க வேண்டும்.

  • கவனச்சிதறல்களை உண்டாக்கும் பொருட்களை தள்ளி வைக்கவும்: Put away distractions

உங்கள் உற்பத்தித்திறனைத் தடுக்கும் கவனச்சிதறல்களைக் கண்டறிந்து அகற்றவும். உங்கள் மொபைலில் வரும் நோட்டிபிக்கேஸன் உங்கள் வேலை விட்டு அதை பார்க்க தூண்டும், அதனால் உங்கள் வேலை பாதிக்கப்படும்.

அதை தடுக்க வேலை நேரத்தில் மொபைலை தள்ளி வைப்பது மிக மிக நல்லது. ட்ரை பண்ணி பாருங்கள். இதனால் உங்கள் வேலை எந்தளவிற்கு முடிந்துள்ளது என்பதை உணர்வீர்கள்.

  • ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுவதை தவிர்த்தல்: Avoiding multitasking at the same time

குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு ஒதுக்கி கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, ஈமெயில்களைச் சரிபார்ப்பதற்கும், தொலைபேசி அழைப்புகளைச் செய்வதற்கும் அல்லது குறிப்பிட்ட பணியில் வேலை செய்வதற்கும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

உங்கள் நேரத்தைப் பிரிப்பதன் மூலம், நீங்கள் பல வேலைகளைத் தவிர்த்து, குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்தி வெற்றியை கொள்வீர்கள்.

  • “முடியாது” என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்:

உங்கள் கடமைகளை உணர்ந்து, நீங்கள் கையாளக்கூடியதை விட அதிகமான பணிகளை கண்டிப்பாக செய்யாதீர்கள். உங்கள் கடமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த பணியை முடிப்பது தான் மிக முக்கியமானதாகும். மற்றவர்கள் நம்மிடம் நம் வேலையை தாண்டி ஏதேனும் உங்களுக்கு வேலை தந்தால் என்னால் முடியாது என்று கூறிவிடுங்கள்.

  • பணிகளை ஒப்படைத்தல்: Assignment of tasks

முடிந்தால், உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு குறிப்பாக வேறொருவரால் திறம்பட செய்யக்கூடிய பணிகளை ஒப்படைக்கவும். இதனால் அந்த குறிப்பிட்ட வேலையில் அதிக கவனம்  செலுத்துவதற்கான நேரத்தை விடுவிக்கும்.

  • இடைவேளை எடுங்கள்: Take a break

வேலைகளுக்கு இடையில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் உற்பத்தித் திறன் அதிகமாகும்.  அதாவது 5 நிமிட ஓய்வு பிறகு தொடர்ந்து 25 நிமிட வேலை இது ஆபிஸ் போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு பொருந்தும்.

குறிப்பாக இதை நினைவில் கொள்ளுங்கள், நேரத்தை மிச்சப்படுத்த இதில் காட்டப்பட்டுள்ளவை அனைத்தும் உங்களுக்கு கண்டிப்பாக பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. அது அவரவர் வேலைக்கு தகுந்தார் போல் மாற்றம் ஏற்படும்.

ஆகையால் உங்கள் தேவைகள் மற்றும் பணிகளுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து செயல் படுத்துங்கள். வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான்.

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: Effective time management, Time Management, Assignment of tasks, motivation




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights