Earthquake Tiba al-Fujairah

UAE-ன் திபா அல் புஜைராவில் இன்று காலை நிலநடுக்கம்.

395

UAE-ன் திபா அல் புஜைராவில் இன்று காலை நிலநடுக்கம். Earthquake Tiba al-Fujairah this morning

Earthquake Tiba al-FujairahUAE-ன் திபா அல் புஜைராவில் இன்று காலை யில் இரண்டு தடவை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை புஜைராவில் இரண்டு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம்  (NCM) தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் என்.சி.எம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ‘ரிக்டர் அளவில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மே 24 அன்று அதிகாலை 4:54 மணிக்கு திபா அல் புஜைராவில் பதிவாகியுள்ளது’.

இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ரிக்டர் அளவில் 2.3 என்ற இரண்டாவது நிலநடுக்கம் அதே பிராந்தியத்தில் காலை 7.24 மணிக்கு உணரப்பட்டதாக என்.சி.எம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தினால் பாதிப்புகள் எதும் பதிவு செய்யப்படவில்லை.

Our Facebook Page

Keywords: Earthquake Tiba al-Fujairah this morning




%d bloggers like this: