Teachers invited to school

முகக்கவசம் மற்றும் இனிப்பு வழங்கி பள்ளிக்கு அழைத்த ஆசிரியர்கள்

508

முகக்கவசம் மற்றும் இனிப்பு வழங்கி பள்ளிக்கு அழைத்த ஆசிரியர்கள். Teachers invited to school offering masks and sweets

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவி செய்வதில் சிறந்த முன் உதாரணமாக திகழும் இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், கொரோனா ஊரடங்கு சமயத்தின்போது இப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும், ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தனர்.

பாடங்களை கற்க வசதியாக உதவி தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் செல்போன்கள் வாங்கி கொடுத்தார். இந்தநிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன்கருதி 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, இப்பள்ளியை சேர்ந்த உதவி தலைமைஆசிரியை பைரவி, ஆசிரியர்கள் செல்வராஜ், சுரேஷ் ஆகியோர் நேற்று எளம்பலூரில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு முகக்கவசம் மற்றும் இனிப்பு வழங்கி பள்ளிக்கு பாதுகாப்பான முறையில் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

Keywords: Teachers invited to school, Perambalur News, Perambalur District News, பெரம்பலூர் செய்திகள்,




%d bloggers like this: