துபாயில் 220 கிமீ வேகத்தில் சென்ற ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கபட்டது.
Dubai Police arrest driver for driving at 220kmph
துபாயில் ஷேக் முகமது பின் ஜாயீத் சாலை (E311) வழியாக மணிக்கு 220 கிமீ வேகத்தில் சென்றதற்காக ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டார். வேகமாக வாகனத்தை ஓட்டியதற்காக கைது செய்ததாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
அந்த ஓட்டுனருக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக துபாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.
போலீசார் பகிர்ந்த காணொளியில், காரின் டாஷ்போர்டில் வேகமானி (Speedometer) 220 கிமீ வேகத்தை தெளிவாகக் காட்டுகிறது.
அந்த காட்சிகள் ஓட்டுனரின் இருக்கையில் இருந்து படம் பிடிக்கப்பட்டதாக தோன்றுகிறது. மேலும், அவர் வண்டி ஓட்டும்போது கைபேசியை பயன்படுத்தியிருந்தால், அது ஒரு முக்கிய சட்ட மீறல் ஆகும், மேலும் கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும்.
இந்த வழக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பப்ளிக் பிராசிகியூஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, துபாய் காவல்துறை கண்காணித்து வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலான சில வீடியோக்களின் அடிப்படையில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மழையில் கார்களை டிரிப்ட் செய்தவர்களும், இரண்டு சக்கரத்தில் ஓட்டியவர்களும் அதில் அடங்குவர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது மிகக் கடுமையான போக்குவரத்து குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமையாளருக்கு 50,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Keywords: Dubai Police arrest driver, Dubai News, Dubai Tamil News, UAE Tamil News, Gulf Tamil News.
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
அமீரக செய்திகள்
பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் அபுதாபியில் இலவச பஸ் பயணம்
ஷார்ஜா பள்ளி கட்டுமான விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
துபாய் மெட்ரோ: மஷ்ரெக் நிலையம் இனி இன்சூரன்ஸ் மார்க்கெட்