Dubai: Plan to double the number of metro stations.!
துபாய் 2040க்குள் தனது மெட்ரோ மற்றும் டிராம் நிலையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
துபாய் நிர்வாகக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை துணை பிரதமரும் நிதி அமைச்சருமான ஷேக் மக்தோம் பின் முகமத் தலைமையேற்று நடத்தினார். அக்கூட்டதில் இந்தப் பெரிய திட்டம் பற்றி வெளியிடப்பட்டது.
துபாயில் தற்போது 55 மெட்ரோ நிலையங்கள் உள்ளன. ரெட் லைனில் 35 மற்றும் கிரீன் லைனில் 20, மேலும் 11 டிராம் நிலையங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 2030க்குள் 96 நிலையங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2040க்குள் 140 நிலையங்களை 228 சதுர கிலோமீட்டர்கள் பரப்பில் கொண்டு வரவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கம் துபாய் மெட்ரோ நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாகும். இது 20 நிமிடத்தில் நகரம் (’20-minute city’) என்ற துபாய் கனவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதன் மூலம் பொது போக்குவரத்து பயன்பாட்டை 45 சதவீதமாக அதிகரிக்க, கார்பன் உமிழ்வுகளை குறைக்கவும், பொது இடங்களின் தரத்தை மேம்படுத்தவும், நிழலான நடை பாதைகளை அமைத்து பொது மக்கள் நடந்து செல்வதை ஊக்குவிக்கவும் இது பெரும் முயற்சியாக இருக்கும்.
இத்திட்டம் மேலும் மெட்ரோ நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளையும் மேம்படுத்தி பயனர்களை ஈர்க்கும் வகையில் வியாபார மையமாக இருக்கும் வகையில் அமைய உள்ளது.
Keywords: Metro Stations, UAE Tamil News, GCC Tamil News, Gulf Tamil News.
அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
UAE: வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்புப் பிரசங்க நேரம் குறைப்பு
குவைத்தில் ஹலால் உணவுக்கான புதிய விதிமுறைகள்
UAE : கூட்ட நெரிசலை தடுக்க ஆன்லைன் செக்-இன்.!
மஸ்கட் – ரத்தம் தானம் செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு