ADVERTISEMENT
Dubai Municipality Warns: Clear Neglected Vehicles

துபாய்: புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற உத்தரவு

Dubai Municipality Warns: Clear Neglected Vehicles

துபாய் நகராட்சி சோதனை மையங்களில் புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற உத்தரவு.

அமீரகத்திலுள்ள ஒன்பது பதிவு மற்றும் சோதனை மையங்களில் புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை வாகன உரிமையாளர்கள் விரைவில் அகற்ற எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. உரிமையாளர்கள் அகற்ற தவறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என துபாய் நகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக சோதனை மையங்கள் நிறுத்துமிடங்கள் மற்றும் மைய வளாகங்களில் வாகனங்களை விட்டுச்சென்ற உரிமையாளர்களுக்கு துபாய் நகராட்சியானது 68 வாகன அகற்ற உத்தரவுகள்; 38 போஸ்டர்கள்; மற்றும் 30 மெசேஜ்களை அனுப்பியுள்ளது.

வார்சான், குசைஸ், ஷமில் முஹைஸ்னா, வாசல் நத் அல் ஹம்மார், தமாம், அல் அவிர் மோட்டார் ஷோ, அல் பர்ஷா, அல் முமையாஸ், மற்றும் வாசல் அல் ஜடப் மையங்களில் கைவிடப்பட்ட வாகனங்களுக்காக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியில் திறம்பட நிர்வகிக்கப்பட்டதாக நகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

புறக்கணிக்கப்பட்ட வாகனத்தை கண்டுபிடித்தவுடன், அதிகாரிகள் முதலில் மூன்று முதல் 15 நாட்கள் வரை எச்சரிக்கை செய்வார்கள். வாகனத்தின் இடம் மற்றும் நிலையைப் பொருத்து, எச்சரிக்கை காலம் மாறுபடும். துபாய்-பதிவு வாகனமாக இருந்தால், உரிமையாளருக்கு SMS அனுப்பப்படும். அதில் குறிப்பிட்ட காலத்திற்குள் வாகனம் அகற்றப்படாவிட்டால், அது அல் அவிர் பகுதியில் உள்ள பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பிறகு ஏலத்திற்கு செல்லும்முன், உரிமையாளர் நகராட்சியைத் தொடர்பு கொண்டு அதை வாகனத்தை மீட்டுக்கொள்ளலாம்.

துபாய் நகராட்சி கடந்த மாதம் புறக்கணிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கண்காணிக்க குழு ஒன்றை அமைத்ததாக தெரிவித்தது. இதில் இலகு மற்றும் கனரக வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் படகுகள் போன்றவையும் அடங்கும். இந்த குழுவில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திலிருந்து (RTA) ஒரு குழு மற்றும் புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக ஒரு நிறுவனமும் இதில் இணைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keywords: Municipality Warns, Gulf Tamil News, UAE Tamil News, GCC Tamil News,

அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.

Our Facebook Page

ADVERTISEMENT

ALSO READ:
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?
துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்
UAE: வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்புப் பிரசங்க நேரம் குறைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *