Dubai Municipality: Penalty for failure to clean car
துபாய் முனிசிபாலிட்டி கார் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை: 500 திர்ஹம்ஸ் அபராதத்தை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
அமீரகத்தில் இருந்து நீண்ட நாட்கள் வெளியூர் பயணம் செய்ய உள்ள கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை அழுக்காக வைக்காமல் இருக்க வேண்டும் என்று துபாய் முனிசிபாலிட்டி முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை பின்பற்றாமல் இருந்தால் 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படலாம்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான பதிவில், அமீரகத்தின் தூய்மையை பாதுகாக்க, பயணத்திற்கு முன் தங்கள் வாகனங்களை சுத்தம் செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு முனிசிபாலிட்டி அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாகனங்களை சரியான இடத்தில் நிறுத்தவும், பொது இடங்களில் அவற்றை நிறுத்தாமல் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வாகனங்களை போக்குவரத்துக்கு அல்லது துப்புரவுப் பணிகளுக்கு இடையூறாக வைக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். துபாய் கழிவு மேலாண்மைத் துறையின் ‘எனது வாகனம்’ பிரச்சாரத்தின் கீழ், தங்கள் வாகனங்களை சுத்தம் செய்யாவிட்டால், உரிமையாளர்களுக்கு 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
சமீபத்தில், கார் பதிவு மற்றும் சோதனை மையங்களில் கைவிடப்பட்ட அழுக்கு வாகனங்களுக்கு 120க்கும் மேற்பட்ட எச்சரிக்கைகள் விடப்பட்டன. இத்தகைய விதிமீறலை தவிர்க்காதவர்கள் அபராதம் மட்டும் அல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்தாவிட்டால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆறு மாதங்கள் முனிசிபாலிட்டி கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படும். இந்த காலத்தில் உரிமையாளர்கள் 1,381 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் சேமிப்பு கட்டணத்தை செலுத்தி தங்கள் வாகனங்களை மீட்டுக்கொள்ளலாம். ஆறு மாதங்களுக்குள் உரிமை கோரப்படாவிட்டால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kewords: Dubai Municipality, Gulf Tamil News, GCC Tamil News, UAE Tamil news, Tamil News UAE, Dubai Tamil News
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
ஐக்கிய அரபு அமீரகம்: யூனியன் உறுதிமொழி தினம்
துபாய் விமான நிலையத்தில் ஒரே நாளில் 2.86 லட்சம் பயணிகள்
அபுதாபியில் இந்திய மருத்துவரின் பெயரில் சாலைக்கு பெயர்
துபாய்: புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற உத்தரவு