Free Vehicle InspectionFree Vehicle Inspection

Dubai: free vehicle inspection

கோடைகாலத்தில் சூட்டின் காரணமாக டயர் வெடித்துவிடுகிறது. இதன் காரணமாக விபத்துகள் அதிகமாக நிகழும் வாய்ப்புகள் உண்டாகிறது. அதோடு கார் தீ விபத்துகள் போன்ற பிற ஆபத்துகளும் நிகழ்ந்து விடுகிறது.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த துபாய் போலீஸ் ஆகஸ்ட் மாத இறுதி வரை இலவச கார்பரிசோதனைகளை வழங்க முடிவு செய்து அறிவித்துள்ளது. அனைத்து வாகன உரிமையாளர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள AutoPro மையங்களில் இலவசமாக கார்களை பரிசோதித்து கொள்ளலாம்.

AutoPro மையங்களில் கிடைக்கும் 10 வாகன பரிசோதனைகள்:

 1. ஏசி மற்றும் காற்று வடிகட்டி (AC and air filter)
 2. இருக்கை பெல்ட் நிலை (Seat belts condition)
 3. வைப்பர் நிலை (Wiper blades condition)
 4. கண்ணாடி துவைப்பான் திரவம் (Windshield washer fluid)
 5. குளிர்பாதை குழாய்கள் நிலை (Radiator hoses condition)
 6. பேட்டரியின் நிலை (Battery health)
 7. இயந்திர எண்ணெய் மற்றும் குளிர்ச்சி திரவ நிலைகள் (Engine oil and coolant levels)
 8. டயர் அழுத்தம் நிலை (Tire pressure condition)
 9. திரவ நிலைகள் (Fluids levels)
 10. விளக்குகள் (Lights)

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக துபாய் போலீஸின் ‘விபத்துகள் இல்லாத கோடை’ என்ற பிரச்சாரத்தை நடத்துகிறது. போக்குவரத்து துறையின் ஒரு குழு டயர் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வாகன ஓட்டிகளுக்கு கற்றுக்கொடுக்கிறது. வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு குறிப்புகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்:

 1. டயர்கள் நல்ல நிலையிலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதில் வைப்ரேஷன் இல்லாமல் இருக்க வேண்டும்.
 2. அடிக்கடி டயர்கள் உடைந்து அல்லது கிழிந்து இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும்.
 3. இன்ஜின் ஆயில் முறைப்படி மாற்றவும்.
 4. ஏதேனும் திரவ கசிவு இருப்பதை பரிசோதிக்கவும்.
 5. விபத்துகளைத் தவிர்க்க முறைப்படி வாகன பரிசோதனைகள் செய்வது மிகவும முக்கியமாகும்.

போக்குவரத்து விபத்துகள் முக்கியமான பிரச்சினையாக உலகம் முழுவதும் இருக்கிறது. காரணம் விபத்துகளால் உயிரிழப்பு, காயங்கள் மற்றும் பொருட்களின் இழப்புகளை ஏற்படுத்துகின்றன.

சமீபத்தில், அபுதாபி போலீஸ் 2023ல் 22 விபத்துகள் பதிவாகியதைத் தொடர்ந்து டயர் வெடிப்புகளை கவனிக்க வாகன ஓட்டிகளை எச்சரித்தனர்.

Keywords: Vehicle Inspection, Gulf Tamil News, Dubai Tamil News, UAE Tamil News, GCC Tamil News,

அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.

Our Facebook Page

ALSO READ:
ஹிஜ்ரி புத்தாண்டு: தனியார் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?
துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்
UAE: வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்புப் பிரசங்க நேரம் குறைப்பு

By AliBhai

My name is Mohammed Ali, and I have been managing my own website for over 13 years. Driven by my personal passion, I consistently gather and share information from various online sources. This ongoing effort reflects my dedication to providing valuable content to my audience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *