Dubai: Eid al-Adha free parking and metro timings
துபாய்: ஈத் பெருநாள் இலவச பார்க்கிங் விபரம் மற்றும் மெட்ரோ நேர விபரங்களை RTA அறிவித்துள்ளது.
ஈத் பெருநாளையொட்டி நான்கு நாட்கள் இலவச பார்க்கிங்க் என்று துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
துபாயில் வாகனங்களை வைத்திருப்பவர்கள் ஜூன் 15 (சனி) முதல் ஜூன் 18 (செவ்வாய்) வரை நான்கு நாட்கள் பொதுப் பார்க்கிங்கில் உங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம். அதே நேரத்தில் மல்ட்டி லெவல் பார்க்கிங் இடங்களுக்கு இது பொருந்தாது. ஜூன் 19 முதல் பார்க்கிங் கட்டணங்கள் மீண்டும் பழையபடி தொடங்கும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
ஈத் அல் அதா விடுமுறையின் போது துபாய் மெட்ரோ மற்றும் துபாய் ட்ராம் புதிய இயக்கப்படும் நேரங்களையும் RTA அறிவித்துள்ளது.
ரெட் மற்றும் கிரீன் லைன்கள் இயங்கும் நேரங்கள்:
- வெள்ளிக்கிழமை (ஜூன் 14) மற்றும் சனிக்கிழமை காலை 5 மணி முதல் மறுநாள் 1 மணி வரை.
- ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) காலை 8 மணி முதல் மறுநாள் 1 மணி வரை.
- திங்கள் முதல் வெள்ளி (ஜூன் 17-21) காலை 5 மணி முதல் மறுநாள் 1 மணி வரை.
துபாய் ட்ராம் இயங்கும் நேரங்கள்:
- சனிக்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் 1 மணி வரை.
- ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மறுநாள் 1 மணி வரை.
- திங்கள் முதல் சனிக்கிழமை (ஜூன் 17-21) காலை 6 மணி முதல் மறுநாள் 1 மணி வரை.
அனைத்து RTA வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் (Customer Happiness Centres) விடுமுறையின் போது இயங்காது. ஆனால் உம்மு ரமூல், டேரா, பர்ஷா, மற்றும் அல்கிபாஃப் ஆகிய இடங்களில் உள்ள கியோஸ்க்கள் (kiosks) அல்லது ஸ்மார்ட் வாடிக்கையாளர் மையங்கள் (smart customer centres) திறந்து இருக்கும். RTA தலைமை அலுவலகம் 24/7 இயங்கும்.
அனைத்து சேவை வழங்குநர் மையங்களும் ஈத் அல் அதா விடுமுறையில் மூடப்படும், ஆனால் தொழில்நுட்ப சோதனை சேவைகள் ஜூன் 18 அன்று மீண்டும் தொடங்கும். பொதுப் பணிகள் ஜூன் 19 (புதன்) முதல் எப்போதும் போல இயங்கும்.
பஸ் நேரங்கள் மற்றும் கடல் போக்குவரத்து:
- அல் குபைபா பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும் E100 ஜூன் 14 முதல் 18 வரை இயங்காது. இந்த நேரத்தில் பயணிகள் இப்னு பட்டூட்டா பஸ் நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் E101 பஸ்சை பயன்படுத்தி கொள்ளவும்.
- அல் ஜபிலியா பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும் E102 ஜூன் 14 முதல் 18 வரை இயங்காது. பயணிகள் இதே வழியை இப்னு பட்டூட்டா பஸ் நிலையத்தில் இருந்து முசாபா செல்லும் பேருந்தைப் பயன்படுத்தலாம்.
படகுகள் போக்கு வரத்து துபாய் பேரி (Dubai Ferry) மற்றும் அப்ரா (Abra) உள்ளிட்ட கடல் போக்குவரத்து இயங்கும் நேரங்களை RTA செயலியில் தெரிந்து கொள்ளலாம்.
துபாய் அரசு பொது மற்றும் தனியார் துறைகளின் ஈத் அல் அதா விடுமுறைகள் சனி முதல் செவ்வாய் வரை என அறிவித்துள்ளது. புதன் கிழடை அதாவது ஜூன் 19 அன்று எப்போதும் போல அனைத்துப் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீண்டும் செயல் படத் தொடங்கும்.
Keywords: Eid al-Adha free parking, Metro Timings, Dubai news, Dubai Tamil News, Ameeraga Seithigal, Ameeraga Tamil Seithigal
ALSO READ:
பரபரப்புடன் காணப்படும் துபாய் விமான நிலையம்.
அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகை நேரம் அறிவிப்பு
ஹஜ் யாத்திரிகர்களுக்காக சவூதி அரேபியாவில் பறக்கும் டாக்சி அறிமுகம்
குவைத்: கட்டிடத் தீவிபத்தில் 41 பேர் மரணம், பலர் காயம்