ADVERTISEMENT
Dubai Authorities Seize Over 220 Illegal Transport Cars

துபாய்: பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட 220 கார்கள் பறிமுதல்

Dubai Authorities Seize Over 220 Illegal Transport Cars

சட்டவிரோதமாக பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட 220 க்கும் மேற்பட்ட தனியார் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

துபாய் விமான நிலையத்தின் டெர்மினல்கள் 1, 2, மற்றும் 3 ஆகிய இடங்களில் RTA மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பொதுத் துறை நடத்திய சோதனைகளுக்குப் பிறகு மொத்தம் 90 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹட்டாவில் மேலும் 86 சட்டவிரோத வாகனங்களும், ஜெபல் அலி பகுதியில் 49 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

RTA-வின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியைச் சேர்ந்த சயீத் அல் பலூஷி, துபாய் காவல்துறையுடன் இணைந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் அதிகமாக சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பகுதிகளில் கவனம் செலுத்தியதாகக் கூறினார். உரிமம் இல்லாத பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்கும் மற்றும் ஊக்குவிக்கும் நபர்களுக்கு அமீரக சட்ட விதிமீறல்கள் மேற்கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டன.

ஃபெடரல் டிராஃபிக் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான தண்டனையில் 3,000 திர்ஹம் அபராதம், 24 கருப்பு புள்ளிகள் மற்றும் 30 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் ஆகியவை அடங்கும்.

ADVERTISEMENT

Our Facebook Page

இதையும் படிக்கலாம்
ஜுன் 1 முதல் யூஸ் அன் த்ரோ பைகளுக்கு தடை
விசிட் விசாவில் கூடுதல் நாள் தங்கினால் அபராதம்

Keywords: Dubai Authorities, Dubai News, Gulf news Tamil, Tamil gulf news, UAE News Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *