Dubai Airport Sets Up Special Counters for Haj Pilgrims
ஹஜ்
யாத்திரைக்காக துபாயிலிருந்து செல்லும் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சிறப்பு செக்-இன் மற்றும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுக்கான பிரத்யேக கவுன்டர்கள் மற்றும் புறப்பாடு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈத் அல் அதா விடுமுறை மற்றும் கோடை விடுமுறைக்கு முன் செல்லும் பயனிகளிள் கூட்ட நெரிசலில் சிக்காமல் தனியாக ஹஜ் யாத்ரீகர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையத்தின் ஹஜ் கமிட்டியின் தலைவரான முகமது அல் மர்சூகி இது பற்றி கூறும்போது: “ஹஜ் யாத்ரீகர்கள் விமான நிலைய கட்டிடத்திற்குள் நுழையும் தருணத்திலிருந்து, அவர்கள் புறப்படும் வாயில்களை அடையும் வரை ஒரு தனிப்பட்ட நடைபாதை உள்ளது.” என்றார்.
ஹஜ் விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறப்பு புறப்படும் வாயில்களைக் கோரின. “ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் ஒரு பிரத்யேக முனையம் மற்றும் ஒரு குறிப்பிட்ட பகுதி உள்ளது. உதாரணமாக, சில பயணிகள் டெர்மினல் 3, ஏரியா 3 இலிருந்து பயணிப்பார்கள்; சவுதி ஏர்லைன்ஸ் டெர்மினல் 1, ஏரியா 6; மற்றும் ஃப்ளைனாஸ் டெர்மினல் 1, ஏரியா 4 இலிருந்து புறப்படும்” என்று அந்த அதிகாரி விளக்கினார். .
உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்கள் ஹஜ் செய்ய வசதியாக ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட விகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த வருடம் 6,200 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து செல்ல உள்ளனர். அவர்களில் 4,600 பேர் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) பயணம் செய்ய உள்ளார்கள். வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளின் ஒதுக்கீடு மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 1,00,000 க்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் துபாய் விமான நிலையம் வழியாக செல்ல வாய்ப்பிருப்பதாக கூறினார்.
ஹஜ் யாத்திரை, ஜூன் 14 அன்று தொடங்கும். அரபாத் தினம் மற்றும் ஈத் அல் அதாவுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்களுக்கு ஜூன் 15-18 தேதிகளில் பொது விடுமுறை இருக்கும். பலர் துபாயில் இருந்து சிறிய விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்வார்கள்.
ஹஜ் யாத்ரீகர்கள் தங்கள் விமானத்திற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். விமான நிலையத்தில், அவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு சரிபார்க்கப்படும். யாத்திரையின் போது எப்படி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள். குடைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்படும்.
யாத்ரீகர்கள் தங்கள் பாஸ்போர்ட், ஹஜ்க்கான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தடுப்பூசி அட்டைகளை கொண்டு வர வேண்டும் என்றும் அல் மர்சூகி கூறினார்.
விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் பயண விவரங்களையும் சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஹஜ் பயணத்தின் போது சவூதி அரேபியாவில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்பதால், புனித யாத்திரையின் போது தண்ணீர் அதிகமாக குடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
ALSO READ:
கத்தார்: மானியத்துடன் கூடிய குர்பான் ஆடுகள் விற்பனை
ஈத் அல் அதா விடுமுறையை கொண்டாட எட்டு கடற்கரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹஜ்ஜின் போது சராசரிக்கும் அதிகமான வெப்பம் இருக்கும் என எச்சரிக்கை!
Keywords: Haj Pilgrims, Dubai Airport, Special Counters, Dubai Tamil News, GCC Tamil News, Gulf News Tamil