Dubai Airport is busy with the upcoming holidays.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையம் மிகுந்த பரபரப்புடன் காணப்படும் என்று DXB தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகும் ஈத் அல் அதா விடுமுறையை முன்னிட்டு, பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லத் தயாராகியுள்ளனர். ஈத் அல் அதா விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகள் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அதிக பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பயணிகள் அதிகம் காத்திருக்கும் இந்த பிஸி நேரங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) வெளியிட்டுள்ளது. பீக் ஹவர்ஸில், விமான நிலையத்திற்குள் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என DXB ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, பயணிகள் தங்கள் வீட்டிலேயே குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விடைபெறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவாக, பலர் தங்கள் உறவினர்களை விமான நிலையத்திற்குள் சென்று வழியனுப்பும் வழக்கம் உள்ளது. அவர்கள் செக்-இன் செயற்பாடுகளை முடிக்கும் வரை டெர்மினல்களில் காத்திருந்து வழியனுப்புவர். விடுமுறை நாட்களானதால் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். இதனை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக DXB இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், விமான நிலைய டெர்மினல்கள் 1 மற்றும் 3 ஆகியவற்றின் அரைவல் பகுதி முன் தளங்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலைய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் என்று DXB அறிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ளோர் ஜூன் 15 முதல் 18 வரை, ஈத் அல் அதா பண்டிகை விடுமுறையான நான்கு நாட்கள் விடுமுறை அனுபவிப்பார்கள். அதற்குப்பின், ஓரிரு வாரங்களில் பள்ளிகள் இரண்டு மாத கோடை விடுமுறைக்கு மூடப்படும். எனவே, சராசரியாக தினசரி 2,64,000 பேர் தங்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். ஜூன் 12 முதல் 25 வரை 3.7 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்க துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) தயாராகி உள்ளது. குறிப்பாக, ஜூன் 22 அன்று பயணிகளின் எண்ணிக்கை மட்டும் 2,87,000 ஐத் தாண்டும் என்றும், அன்றைய தினம் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்றும் DXB எதிர்பார்க்கிறது.
நீங்களும் இந்த நாட்களில் தாய்நாடு செல்ல தயாரானால் முன்கூட்டியே திட்டமிட்டு முன்னதாக சென்று விடுங்கள். அதுவே உங்கள் பயணத்தை எளிமையானதாக ஆக்கிவிடும்.
Keywords: Dubai Airport, Eid Holidays, DXB, Dubai Tamil News, GCC Tamil News, Gulf News Tamil
ALSO READ:
அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகை நேரம் அறிவிப்பு
ஹஜ் யாத்திரிகர்களுக்காக சவூதி அரேபியாவில் பறக்கும் டாக்சி அறிமுகம்
குவைத்: கட்டிடத் தீவிபத்தில் 41 பேர் மரணம், பலர் காயம்
துபாய் விமான நிலையத்தில் ஹஜ் பயனிகளுக்காக சிறப்பு கவுன்டர்கள்