Doctors wearing black belts

கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர்.

232

கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர்.

Doctors wearing black belts were on duty.

கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் பணிபுரிந்தனர்.

நாடு முழுவதும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சட்டத்தை போல டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஒரே பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான உறுதியான பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களை தாக்குபவர்களை விரைவாகவும், கடுமையாகவும் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தார்கள். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 30 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகள் தனியார் மருத்துவமனைகள் முன்பு ஒட்டப்பட்டிருந்தன.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: Doctors wearing black belts,




%d bloggers like this: