ADVERTISEMENT
Doctor accused of sexual assault in France!

பிரான்சில் மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Doctor accused of sexual assault in France!

பிரான்சில் ஓய்வு பெற்ற மருத்துவர் மீது 299 பெண்கள் பாலியல் புகார் – அதிர்ச்சி தகவல்!

பிரான்சின் வான்னெஸ் (Vannes) நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் ஜோயல் லிஸ்கோர் (Joël Le Scouarnec) மீது 299 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எழுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்முறை (Sexual assault)

1989ம் ஆண்டு முதல் மருத்துவப் பணியில் இருந்த ஜோயல், 2017ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு, ஓய்வு பெறும் முன்பே குழந்தைகள் தொடர்பான ஆபாசக் காணொளிகளை வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, அவரிடம் சிகிச்சை பெற்றிருந்த பெண்கள், அவர் பல ஆண்டுகளாக மருத்துவமனை சூழலை தவறாக பயன்படுத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சாட்சியங்கள் அளித்து வருகின்றனர்.

இதுவரை 299 பெண்கள் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ள நிலையில், நடத்தப்பட்ட விசாரணையில் நோயாளிகள் மயக்க நிலையில் இருக்கும்போது கூட அவர் பாலியல் துன்புறுத்தலில் (sexual assault) ஈடுபட்டதாக அவர் தானே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT

இதையடுத்து, ஜோயல் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸ் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, மருத்துவத் துறையில் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

📢 இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்

Also Read:
துபாய் மெட்ரோவில் இலவச இஃப்தார்!
துபாய் நைஃப் பகுதியில் கொள்ளை: 4 பேர் கைது
UAE விசிட் விசா: கட்டணங்கள் மற்றும் விவரங்கள்

Our Social Media Pages
Facebook, Instagram, X, whatsapp,

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *