Do you want job?

அரசு வேலை உங்களுக்கு வேண்டுமா?

393

அரசு வேலை உங்களுக்கு வேண்டுமா?  (ஓர் வழிகாட்டித் தொடர்)

Do you want a government job? || Guide series

இந்த தொடரின் முதல் பாகத்தை பார்க்க

இந்த தொடரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) பற்றியும் இந்த தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளைப் பற்றியும் தொடர்ச்சியாக காண இருக்கிறோம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது அரசு ஊழியர்களை தேர்ந்தெடுப்பதற்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு ஆணையம் ஆகும். அரசுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுகள் நடத்தி தேர்வு செய்வது. மேலும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்காக துறை தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

Do you want government job?

தற்பொழுது TNPSC மூலம் நடத்தப்படும் தேர்வுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

குரூப்-1, குரூப் -1 A, குரூப் -1B, குரூப் -2, குரூப் -2A குரூப் -4, குரூப்-5, குரூப்-6, குரூப்-7, குரூப்-8, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு (Combined Engineering Service Exam), Tamil Nadu State Judicial Service Exam, Tamil Nadu Medical Seevice Exam, Tamil Nadh Jail Service Exam மற்றும் சில தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தற்போது ஒவ்வொரு தேர்வுகள் குறித்தும் விரிவாக பார்ப்போம்.

முதலாவதாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் -1 தேர்வு (Combined Civil Services-1 Exam அதாவது, குரூப்-1 தேர்வை பற்றி விரிவாக பார்ப்போம். இந்தத் தேர்வு மூலம் Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner (Commercial Taxes), Assistant Director of Rural Development, District Officer (Fire and Rescue), மற்றும் சில அரசு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

ஊதியம்:ரூ.56,500 முதல் 1,77,500 வரை கிடைக்கும்.

வயது வரம்பு: குறைந்தது 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்சம் 32 வயது வரை இத்தேர்வு எழுத முடியும்.பட்டியல் சாதியினர்,தாழ்த்தப்பட்டவர்,மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் 37 வயது வரை இந்தத் தேர்வை எழுதலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிடப்பட்ட வயது உச்சவரம்பிலிருந்து கூடுதலாக 10 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. மேலும் முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்சமாக 48 வயது வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. (முன்னேறிய வகுப்பினர்). 53 வயது (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள்)

கல்வித்தகுதி:மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்களின் மூலம் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

தேர்வு முறை: இந்தத் தேர்வு மூன்று நிலைகளை கொண்டது.
1. முதல் நிலைத் தேர்வு (Priliminary Exam)
2. முதன்மை தேர்வு (Main Exam)
3. நேர்முகத் தேர்வு (Interview) என மூன்று கட்டங்களாக நடைபெறும்.

1.முதல்நிலைத் தேர்வு

இந்தத் தேர்வு 200 வினாக்களைக் கொண்ட கொள்குறிவகை (Objective Type) தேர்வாகும். ஒவ்வொரு வினாக்கும் 1.5 மதிப்பெண் என கணக்கிட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். இந்த முதல்நிலை தேர்வு என்பது ஒரு Screening Test என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த முதல்நிலைத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. முதல்நிலைத் தேர்வு என்பது அடுத்தக் கட்ட தேர்வான முதன்மைத் தேர்வு எழுதுவதற்கான ஒரு நுழைவுத்தேர்வு என்று கூட கூறலாம். முதல்நிலைத் தேர்வில் இருந்து முதன்மைத் தேர்விற்கு 1:50 என்ற விகித முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். உதாரணமாக 50 நபர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்றால் 2500 நபர்கள் முதல்நிலைத் தேர்வில் இருந்து முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் இன்னொரு விஷயத்தை நாம் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது சிறுபான்மையினர்கள் இந்த முதல்நிலைத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறும் பட்சத்தில் அவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராவதற்கு ரூபாய் 50 ஆயிரம் உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

2.முதன்மை தேர்வு: Primary exam

முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரையில் மூன்று தாள்கள் (Paper -I, Paper -II, Paper-III) உள்ளடக்கிய விரிவாக எழுதும் (Descriptive type) தேர்வாகும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண் என மொத்தம் 850 மதிப்பெண்கள் வழங்கப்படும். தொடர்ந்து மூன்று நாட்கள் இத்தேர்வு நடைப்பெறும். முதல் நாள் Paper-I தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். அதேபோன்றுதான் Paer-II & Paper -III தேர்வுகளும் அடுத்தடுத்த நாட்கள் நடத்தப்படும். அடுத்தபடியாக நேர்காணல் நடைபெறும் இதற்க்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதன்மைத்தேர்வு & நேர்காணல் ஆகிய இரண்டிலும் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் (850+100=900) ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பாடத்திட்டம் (Syllabus): 6 முதல் 12 வகுப்புவரை உள்ள சமச்சீர் பாடங்களைப் படிக்கவேண்டும். குறிப்பாக வரலாறு, இந்திய அரசியலமைப்பு, அறிவியல், புவியியல், பொருளியில், அறவியல், நடப்பு நிகழ்வுகள் மேலும் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude and Mental Ability) கணிதப்பாடங்களைப் படிக்கவேண்டும்.

இந்தத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்கள் கலந்தாய்வின் மூலம் அவர்கள் விரும்பும் பதவிகளைத் தேர்வு செய்து, அந்தந்த தேர்வுகளில் பணி அமர்த்தப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு, பிறகு அவர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப் படுகிறார்கள்.

குரூப்-1 தேர்வு போன்றே குரூப்-1 A தேர்வு (Assistant Conservator of Forest) வனத்துறை உதவி பாதுகாவலர் என்ற பதவிக்காக நடத்தப்படுகிறது. இது குரூப்-1 தேர்வை போன்றே முதல்நிலை முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. இதில் கூடுதலாக உடற்தகுதித்தேர்வும் (Physical Test) நடத்தப்படுகிறது. குறைந்தபட்ச வயது 21 வயது பூர்த்தியாகி இருக்கவேண்டும். ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

அடுத்த பதிவில் நாம் மற்ற தேர்வுகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

அ.பைசல் அஹமது, D.EEE., B.E.,

V. களத்தூர்

Our Facebook Page

Keywords: Guide series, government Jobs, How to prepare for government Jobs?, Do you want job?




%d bloggers like this: