வாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா? Do not drink bottled water in the sun.
வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீரை சூரிய ஒளியில் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைத்த தண்ணீரை நாம் குடிக்கலாமா? அது நம் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? வாங்க பார்க்கலாம்
நீர் மற்றும் சூரிய ஒளி இரண்டிலுமே உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
சூரிய ஒளியில் வைத்து குடிக்கப்படும் தண்ணீர் உங்களுக்கு அதிக சக்தியை தருவதாகவும் உடலுக்கு புத்துயிர் அளிக்க கூடியதாகவும் உள்ளது என்று நிறைய பேர்கள் கூறுகின்றனர். ஆனால் மறுபுற உண்மை என்னவென்றால் வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரை சூரிய ஒளியில் வைக்கும் போது எதிர்மறை விளைவை உண்டு பண்ணுகிறது என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதற்கு காரணம் வாட்டர் பாட்டிலில் உள்ள பிளாஸ்டிக் கெமிக்கலான பிபிஏ அல்லது பிஸ்பெனோல்-ஏ தான் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. பெரும்பாலான பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் இந்த ரசாயனம் இல்லை என்றாலும், பிபிஏ பாலிகார்பனேட் பாட்டில்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. இதிலுள்ள மற்றொரு தீங்கு என்னவென்றால் சூரிய ஒளியில் வாழக் கூடிய பாக்டீரியாக்கள் சூரிய ஒளி வாட்டர் பாட்டிலில் படும் போது அதன் வளர்ச்சியை அதிகரித்து கொள்கிறது.
உணவு வேதியியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பெட் – பாட்டிலில் சூரிய ஒளி படுவதால் கெமிக்கல் இடம்பெயர்வு நடைபெறுகிறது இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு ஆராய்ச்சியாளர்கள் PET- பாட்டிலில் சாதாரண நீர் மற்றும் கார்பனேற்றப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தினர். இந்த பாட்டில் நீரை சூரிய ஒளியில் சுமார் 2, 6 மற்றும் 10 என்ற நாட்கள் கணக்கில் வைத்து சோதித்து பார்த்தனர்.
சாதாரண நீர் கொண்ட பெட் பாட்டிலை சூரிய ஒளியில் வைக்கும் போது எந்தவித தீங்கு விளைவிக்கக் கூடிய ஆல்டிஹைடுகள் எதுவும் இல்லை. ஆனால் கார்பனேற்றப்பட்ட நீரை சூரிய ஒளியில் வைக்கும் போது கார்பன் டை ஆக்சைடால் கெமிக்கல் இடம்பெயர்வு நிகழ்ந்து தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயன மூலக்கூறுகள் இருப்பது தெரிய வந்தது.
இருப்பினும், 2008 ஆம் ஆண்டில் அரிசோனா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய மற்றொரு ஆய்வில், PET பாட்டில்களில் எவ்வளவு தீவிர சூரிய ஒளி காரணமாக ஆண்டிமணி போன்ற கெமிக்கல் உருவாகிறது என்பதை ஆராய்ந்து கூறியுள்ளனர். இந்த ஆண்டிமனியின் தீவிர அளவு நச்சுத்தன்மையுடையதாக இருக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போது வெவ்வேறு வெப்பநிலையில் ஆண்டிமனி வெளியேறுவதை ஆய்வு செய்தனர். கோடை காலங்களில் காருக்குள் இருக்கும் வெப்பநிலை, மூடப்பட்ட அறைகள் மற்றும் கேரேஜ் போன்றவற்றில் 65 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கூடும் போது பெட் பாட்டிலுனுள் ஆண்டிமனி என்ற நச்சுப் பொருள் உருவாகிறது.
இதனால் இந்த நச்சுத் தன்மை தண்ணீரிலும் கலக்குகிறது. 2014 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் சீனாவில் பெட் பாட்டில்களில் அதிக அளவு ஆண்டிமனி மற்றும் பிபிஏ இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் 2016 ஆம் ஆண்டில், மெக்ஸிகோவில் உள்ள நீர் பாட்டில்களில் ஆன்டிமோனியின் உற்பத்தி இருப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ன. இந்த இரண்டு ஆய்வுகளிலும் 65 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருந்தால் நிலைமை மோசமாகக் கூடிய அளவிற்கு நச்சுத்தன்மை கலக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச வாட்டர் பாட்டில் சங்கத்தினர் கருத்துப்படி வாட்டர் பாட்டிலில் உள்ள நீரையும் நம்முடைய மளிகைப் பொருட்களைப் போல் அதிக சூரிய ஒளி படாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
முடிந்த வரை பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தவிர்த்து தாமிரம், எஃகு, கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தலாம். இதனால் நமக்கு தீங்கும் கிடையாது ஆரோக்கியமும் மேம்படும். சுகாதார முறையில் தண்ணீரை குடிப்பதே சிறந்தது என்பதை மறவாதீர்கள்.
Keywords: Do not drink bottled water in the sun, Do not drink