திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வி.களத்தூர் பகுதியில் வாக்கு சேகரித்தனர். DMK and AIADMK candidates campaigned
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். பெரம்பலூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்ச்26 வெள்ளிக்கிழமை வ.களத்தூர் பகுதியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வந்திருந்தனர். முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்குப் பிறகு வாக்கு சேகரித்தனர்.
வ.களத்தூர் பெரிய பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் ஜமாத்தார்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் அப்போது ஜமாத்தார்கள் சார்பாகக் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் உள்ள கோரிக்கைகளைப் படித்த இரா.தமிழ்ச்செல்வன் தான் வெற்றிபெற்றால் உடனடியாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். வேட்பாளருடன் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
அதே போல் திமுக வேட்பாளர் எம்.பிரபாகரன் மில்லத்நகரில் நூர் பள்ளியில் ஜமாத்தார்களை சந்தித்தார் பிறகு மக்கா பள்ளியிலும் பிறகு கிழக்கு ஜும்ஆ பள்ளிவாசலிலும் ஜமாத்தார்களை சந்தித்து வாக்கு கேட்டார். திமுக வேட்பாளருடன் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.