பெரம்பலூர் அருகே 150 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு. Disposed alcohol near Perambalur.
பெரம்பலூர் அருகே 150 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெரம்பலூரை அடுத்த செங்குணம் சறுக்குபாலம் அருகே அரசுக்கு சொந்தமான ஓடைக்காட்டில் சாராயம் காய்ச்ச ஊறல் போடப்பட்டிருந்தது. இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத், பிச்சைமுத்து, அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சுமார் 150 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அதனை கைப்பற்றி அழித்தனர்.
இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கோவில் பாளையத்தை சேர்ந்த சின்னையன் (வயது 38) என்பவர் சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னையனை தேடி வருகின்றனர்.
தினத்தந்தி
[the_ad_placement id=”after-content”]
Keywords: Disposed alcohol, Perambalur News, Perambalur district news
You must log in to post a comment.