ஹாலிவுட்டிலும் தனது நடிப்பால் வென்ற தனுஷ் அவர் நடித்த ஆங்கில படத்துக்கு விருது!

ஹாலிவுட்டிலும் தனது நடிப்பால் வென்ற தனுஷ் அவர் நடித்த ஆங்கில படத்துக்கு விருது!


சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் தனக்கென்று தனிமுத்திரை பதித்து ரசிகர்களை ஈர்த்தவர் தனுஷ். பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுஜன மக்களின் மக்களின் மனம் கவர்ந்தவர். இவரின் நடனங்கள் எல்லோருக்கும் பிடித்து சமூக தளங்களில் டிரண்டாவது வாடிக்கை. அது மன்மத ராசாவிலிருந்து ரவுடி பேபி வரை தொடர்கிறது.

ரவுடி பேபி பாடல் இந்திய அளவில் சாதனை.
சண்டை காட்சிகளில் கலக்கப் போகும் சாய் பல்லவி

தமிழ் திரைப்படங்களைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் முதல் முறையாக அவர் அறிமுகமான படம் ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்’ இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார்.

மந்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் தெருக்கலைஞர் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். தனக்கு பிரத்யேகமான மந்திர சக்திகள் இருப்பதாக மக்களை நம்பவைத்து அவர்களை ஏமாற்றுவார் தனுஷ். இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிப்யா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில்  ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர் படமும் திரையிடப்பட்டது. இதில் சிறந்த நகைச்சுவை திரைப்படத்துக்கான விருதை இந்தப் ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்’ படம் தட்டிச் சென்றுள்ளது.

குறுகிய காலத்தில் வந்து தன்னுடைய இயல்பான நடிப்புத்திறமையினால் தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த இவர், தற்போது ஆங்கிலத்தில் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றி பெறுமை சேர்த்திருக்கிறார். வாழ்த்துக்கள் தனுஷ்.

99total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: