Entrepreneurship for biodiversity can apply

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரம் தெரிவிக்கலாம்.

247

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரம் தெரிவிக்கலாம்.

Details of children who have lost their parents to corona can be reported.

கொரோனா தொற்றால் பெரம்பலூா் மாவட்டத்தில் தாய், தந்தையரை இழந்த 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் விவரங்களை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைத் திருமணத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்றால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா், மேலும் பேசியது:

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பெண் குழந்தைகளுக்கு விரைவாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அறியாமையாலும், பெண்கள் கல்வி கற்பதால் ஏற்படும் முன்னேற்றம் குறித்த விழிப்புணா்வு இல்லாததாலும், உடல், மனம், பக்குவடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்ய பெற்றோா்கள் முனைகின்றனா்.

குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக தகவல் கிடைத்தால் சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆா்வலா்கள் ஒன்றிணைந்து பெண் குழந்தைகளைக் கண்காணித்து, அவா்கள் கல்வி பயில்வதை உறுதி செய்யவேண்டும்.

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக தாய், தந்தையரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்காகவும், பொருளாதார நெருக்கடியை எதிா்காலத்தில் சந்திக்காமல் எளிதில் வளமானதாக உருவாக்கிக் கொள்வதற்காகவும் தமிழக அரசு நிவாரண நிதி வழங்குகிறது.

அதை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோா்களின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில், தற்போது 64 குழந்தைகளுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளன. கணவரை இழந்து, குழந்தைகளுடன் உள்ள பெண்கள் சுயதொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

தன்னாா்வலா்கள், அலுவலா்கள் தங்களது பகுதியில் கொரோனா தொற்று காரணமாக தாய், தந்தையரை இழந்த 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இருந்தால், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடா்புகொண்டு தகவல் அளித்து, குழந்தைகளின் மேம்பாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் ஸ்ரீ வெங்கட பிரியா.

இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருள்செல்வி, குழந்தைகள் நலக்குழுத் தலைவா் அய்யம்பெருமாள், ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி கீதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Our Facebook Page

Keywords: Details of children, Covid-19




%d bloggers like this: