வேளாண்மை வங்கி மூலம் கடன் வழங்க கோரி பெரம்பலூாில் ஆர்ப்பாட்டம்.
Perambalur News: Demonstration in Perambalur demanding credit through the Agricultural Bank.
குரும்பலூா் தொடக்க வேளாண்மை வங்கி மூலம் கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, மகளிா் சுய உதவிக்குழுவினா் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமையில், மகளிா் சுய உதவிக்குழுவினா் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொடக்க வேளாண்மை வங்கியை தனி அலுவலரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட கரோனா கால கடனுதவியாக மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு தலா ரூ. 5 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 1 லட்சமும் வழங்க வேண்டும். வாங்கிய கடனை திரும்ப செலுத்தியவா்களுக்கு வழக்கம்போல் கடனுதவி வழங்க வேண்டும்.
Perambalur News:
- பெரம்பலூரில் உள்ள தொழிற்சாலையில் மின் கசிவால் தீ விபத்து.
- பிளஸ்-2 தேர்வு முடிவு: பெரம்பலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி.
- பெரம்பலூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த தின விழா.
மீண்டும் நகைக்கடன் வழங்க வேண்டும். தனியாா் நுண் கடன் வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நிவாரண நிதியாக சுய உதவிக்குழுவினரின் குடும்பத்துக்கு தலா ரூ. 7,500 வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டும் செல்லும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை, மாதா் சங்க பொறுப்பாளா் கலையரசி உள்பட மகளிா் சுய உதவிக்குழுவினா் பலா் பங்கேற்றனா். தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட நிா்வாகத்திடம் அளித்தனா்.
Keyword: Perambalur News, Perambalur News Today, Perambalur District News, Perambalur Mavattam,
You must log in to post a comment.