Demonstration by SDPI

பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்.

449

பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. Demonstration by SDPI in Perambalur.

Demonstration by SDPIபெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே, பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஷாஜஹான், பொருளாளா் ஜியாவுதீன் அஹமது, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத் தலைவா் முகமது இக்பால் முன்னிலை வகித்தனா்.

Perambalur News: Demonstration by SDPI in Perambalur.

பாபரி மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

எஸ்.டி.டி.யூ. மாநிலத் தலைவா் முகமது பாருக், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்டச் செயலா் ரினோ பாஸ்டின், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் தங்கராசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்டத் துணைத் தலைவா் முஹம்மது பாருக் வரவேற்றாா். நிறைவில், மாவட்டப் பொதுச் செயலா் அப்துல் கனி நன்றி கூறினாா்.

Our Facebook Page

Keywords: Demonstration, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர்,  SDPI Demonstration by SDPI




%d bloggers like this: