சுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க!! Delicious Sri Lankan Eggplant Curry
பொதுவாக கத்தரிக்காய் குழம்பு நம் பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வகையில் வைப்பார்கள். அதே போல இலங்கையிலும் தமிழர்கள் மத்தியில் இந்த கத்தரிக்காய் குழம்பு ரொம்பவும் பேமஸ்தான். இலங்கை முறையில் சுவையான கத்தரிக்காய் குழம்பு எப்படி வைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானவை:
பெரிய வெங்காயம் – 2,
மிளகாய்தூள் – 3 டீஸ்பூன்அல்லது பச்சை மிளகாய் – 6,
முதல் தேங்காய்ப்பால் – அரை கப்,
இரண்டாம் தேங்காய்ப்பால் -ஒன்றரை கப்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
பூண்டு – 6 பல்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் -தேவையான அளவு.
தாளிக்க: பட்டை – 2, கறிவேப்பிலை – சிறிது, வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்,சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
Delicious Sri Lankan Eggplant Curry
செய்முறை:
கத்தரிக்காயை காம்பு நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து நறுக்கியதை பொரித்தெடுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். பூண்டை தோலுரித்துநசுக்குங்கள். இரண்டாம் தேங்காய்ப்பாலில் வெங்காயம், மிளகாய்தூள் அல்லது சிறியபச்சைமிளகாய், உப்பு சேர்த்து விடாமல் கிளறி வேகவிடுங்கள். வெந்ததும் கத்தரிக்காய் துண்டுகள்,முதல் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைதாளித்தாள் போதும் ரெடியாகிடும் சுவையான ஸ்ரீலங்கன் கத்தரி குழம்பு.
tag: kitchen tips
மசாலா மீன் ப்ரை செய்வோமா? | |
காளான் பிரியாணி செய்யலாம் வாங்க…! | |
சுவையான நண்டு கிரேவி செய்யலாம் வாங்க | |
அருமையான ஸ்வீட்டை அரிசி மாவிலேயே செய்யலாம். | |
காரம் சாரமான சுவையோடு கமகமவென்று நண்டு சூப் எப்படி செய்யலாம்? | |
வீட்டில் எறும்புத் தொல்லையா? உங்களுக்காக சில டிப்ஸ்! | |
சுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க! | |
வெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க! | |
பீட்சாவில் தோசை | |
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்து சாப்பிட விருப்பமா? |
You must log in to post a comment.