Deer death

வ.களத்தூர் அருகே தெருநாய்கள் கடித்து பெண் மான் சாவு.

586

வ.களத்தூர் அருகே தெருநாய்கள் கடித்து பெண் மான் சாவு. Deer death from dog bites

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள ரஞ்சன்குடி வனப்பகுதியில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு வயது பெண் மான் ஒன்று நேற்று காலை வி.களத்தூர் தைக்கால் பிரிவு சாலையில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் அந்த மானை துரத்தி கடித்து குதறின. இதில் மான் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இது பற்றி தகவல் அறிந்த வனசரக அலுவலர் சசிகுமார் உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் பொன்னுசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மானை கைப்பற்றி வி.களத்தூர் கால்நடை மருத்துவர் ராமன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து ரஞ்சன்குடி வனப்பகுதியில் புதைத்தனர்.

தினத்தந்தி

keywords: Deer death, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: