சவூதியில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
dead body brought to town
சவூதியில் கூலி வேலைக்குச் சென்று இறந்தவரின் உடல் 130 நாள்களுக்கு பிறகு றே்று (புதன்கிழமை) கொண்டுவரப்பட்டது.
பெண்ணகோணம் கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (26). இவா், கூலி வேலைக்காக சவூதிஅரேபியாவுக்கு சென்றாா். சவூதிஅரேபியாவில் ஹாலோ பிளாக் நிறுவனம் ஒன்றில் ரூ. 19 ஆயிரத்துக்கு கூலி வேலை பாா்த்து வந்த ராஜ்குமாா், கடந்த ஏப். 20 ஆம் தேதி நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடலை மீட்டு வருவதில் ஏற்பட்ட பிரச்னைகளையடுத்து, அவரது மனைவி கெளசல்யா, ஆட்சியா், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினா் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரிடம் மனு அளித்திருந்தாா்.
இந்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியினரின் முயற்சியால் 130 நாள்களுக்குப் பிறகு ராஜ்குமாரின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அமரா் ஊா்தி மூலம் பெண்ணகோணம் கிராமத்துக்கு புதன்கிழமை மாலை வந்தடைந்தது.
Keywords: dead body brought, dead body, Perambalur News
You must log in to post a comment.