அமீரகத்திற்கு விசிட்டில் செல்ல தற்போது அனுமதியில்லை

அமீரகத்திற்கு விசிட்டில் செல்ல தற்போது அனுமதியில்லை.

521
அமீரகத்திற்கு விசிட் விசாவில் இந்தியர்கள் வர தற்போது அனுமதியில்லை என்று அமீரகத்திற்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

UAE News: Currently can’t travel to the UAE on a visit visa.

இந்தியாவை சேர்ந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் விசிட் மற்றும் டூரிஸ்ட் விசா மூலமாக வருவதற்கு தற்போதுவரையிலும் அனுமதி வழங்கப்படவில்லை என்று அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் தெரிவித்துள்ளார். விசிட் மற்றும் டூரிஸ்ட் விசா சம்பந்தமாக அவர் கூறியதாவது:

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் மற்றும் டூரிஸ்ட் விசாக்கள் மூலமாக வெளிநாட்டவர்கள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயண நெறிமுறைகள் குறித்த தெளிவான அறிவிப்பு வரும் வரையிலும் இந்தியா நாட்டவர்கள் விசிட் விசாக்கள் மூலமாக அமீரகம் வருவதற்கு தற்போது அனுமதியில்லை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே இயக்கப்படும் சிறப்பு விமானங்களில், விசிட் விசா வைத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Gulf News / வளைகுடா செய்திகள்

மேலும் அவர் கூறுகையில், இந்த சூழலில் விசிட் விசா பெற்று அமீரகத்திற்கு வருவதற்கு அமீரக அரசு அனுமதிக்குமா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விசா குறித்து அமீரக அரசின் தெளிவுக்காக காத்திருப்பதாகவும், அதே போல் விசிட் விசாக்களில் பயணிக்க அனுமதிக்கலாமா என்று இந்திய அரசும் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

keyword: UAE News, Gulf News, GCC News, UAE News today,




%d bloggers like this: