ADVERTISEMENT
Court acquitted 57 people

ஒகளூர்: நீதிமன்றம் 57 பேரை விடுதலை செய்தது

26 ஆண்டுகள் பழைய ஒகளூர் வன்முறை வழக்கில் 57 பேரை விடுதலை செய்தது பெரம்பலூர் நீதிமன்றம்.

Court acquitted 57 people

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தின் ஒகளூர் பகுதியில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 57 பேரை விடுதலை செய்யும் உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.

1998 ஆம் ஆண்டில், கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், ஒகளூர் கிராமத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டதாக, மங்களமேடு போலீஸார் தடா பெரியசாமி உள்பட 99 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர், அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில், தேசிய மனித உரிமை ஆணையம் போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. நீண்ட காலமாக நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கில், 42 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதால், நீதிபதி சங்கர் மீதமுள்ள 57 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.


Court acquitted 57 people, Perambalur District News, Perambalur News, Veppanthattai News, Okalur News

ADVERTISEMENT

Our Facebook Page


இதையும் வாசிக்கலாம்
வேப்பந்தட்டை குறுவட்ட அளவில் நடந்த தடகள போட்டி
அத்திப் பழம்: செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும்
பார்லி: நன்மைகள், பக்கவிளைவுகள் மற்றும் சத்துக்கள்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *