பெரம்பலூர் மாவட்டத்தில் 2,759 பேருக்கு கொரோனா தடுப்பூசி.
Corona vaccine for 2,759 people in Perambalur district.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2,759 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் 989 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று மட்டும் 2,759 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்தவகையில் இதுவரை மொத்தம் 72,493 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1,270 கோவிஷீல்டு தடுப்பூசியும், 760 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தினத்தந்தி
Keywords: Corona vaccine, Perambalur district
You must log in to post a comment.