Corona vaccination

பெரம்பலூர் மாவட்டத்தில் 7,358 பேருக்கு கொரோனா தடுப்பூசி

361

பெரம்பலூர் மாவட்டத்தில் 7,358 பேருக்கு கொரோனா தடுப்பூசி. Corona vaccination was given in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 81,271 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களில் 2,284 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதில் முதல்கட்டமாக டாக்டர்கள், மருத்துவ களப்பணியாளர்களும், 2-வது கட்டமாக முதியோருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது. அதன்படி மாவட்டத்தில் இதுவரையில் தேர்தல் பணியாளர்கள் உள்பட 7,358 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

keywords: Corona vaccination, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: