பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதல் பலி | Corona first killed in Perambalur district.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பலனின்றி முதல் பலி.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. அதே போல் இந்தியாவிலும் இந்த நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது. பலி எண்ணிக்கையும் கூடி கொண்டே செல்கிறது.
தமிழகத்தின் திருச்சி மண்டலம், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆரம்பம் முதலே கொரோன பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்புகள் இதுவரை இல்லாமல் இருந்தது. மேலும் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் இருந்து வந்தவர்களினால் பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணிக்கை கூடி கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
Perambalur news
ஆனால் அந்த சமயங்களில் கூட நோய் தாக்கத்தின் வீரியம் குறைவாகத்தான். அதற்கான சிகிச்சை பெற்று பலர் நலமாக வீடு திரும்பினார்கள். இந்த சூழ்நிலையில் சித்த மருத்துவர் ஒருவர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகி இருப்பது பெரம்பலூர் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் செந்தில் குமார் கொரோன நோய் தொற்று இருந்ததை உறுதி செய்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இதன்மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதல் பலி உண்டாகியுள்ளது.
வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் செந்தில்குமார். 54 வயதான இவருக்கு ஜுன் 26-ம் தேதி முதல் நான்கு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அதனால் அவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.
இந்நிலையில் ஜுலை 1-ம் தேதி காலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார்.
Tamil news
- வழிபாட்டுத் தலங்களில் விதிமுறைகளை கடைப்பிடிக்க ஆட்சியா் வலியுறுத்தல்.
- 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தாத்தா! குடிகார தந்தையும் கைது.
ஜுலை 2-ம் தேதி அவருடைய சளி, ரத்தம் மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் கடந்த 4-ம் தேதி அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. Perambalur News
இதையடுத்து, அவருடன் நேரடி தொடர்பில் இருந்த அவரது மனைவி அம்சவள்ளி (வயது 46), மகள் டாக்டர் பாலபிரியா (வயது 27), பக்கத்து வீட்டுக்காரர் கலியமூர்த்தி (வயது 58) ஆகிய மூவரும் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சித்த மருத்துவர் செந்தில் குமார் நேற்று மாலை 4 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் மட்டுமல்லாது பெரம்பலூர் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
You must log in to post a comment.