பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 167 ஆக உயர்வு.
Corona death toll rises to 167
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
53 பேருக்கு தொற்று
இவர்களில் 9,645 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 19 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 12 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 14 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 8 பேர் என மொத்தம் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3 பேர் பலி (Corona death)
சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 674 பேரில் 433 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 241 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவிற்கு நேற்றைய அறிவிப்பின்படி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.
தினத்தந்தி
Keywords: Corona death, COVID death,
You must log in to post a comment.