Congress protest

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

349

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். Congress protest against petrol and diesel price hike.

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் 2 இடங்களில் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மீனவரணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கலந்து கொண்டார். வெங்கடேசபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை குறைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் பனநுங்கு கூடு வண்டியுடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

Our Facebook Page

[the_ad_placement id=”after-content”]

Keywords: Congress protest, price hike, petrol and diesel




%d bloggers like this: