வ.களத்தூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் மீது வழக்கு.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 55). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த முருகன் என்பவருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று ராமசாமி தரப்பினருக்கும், முருகன் தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. இது தொடர்பாக வி.களத்தூர் போலீசில் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் முருகன், செல்லபிள்ளை, மாரிமுத்து உள்பட 5 பேர் மீதும், இதேபோல் முருகன் கொடுத்த புகாரின்பேரில் ராமசாமி, கோவிந்தராஜ், தேவராஜ் உள்பட 5 பேர் மீதும் என மொத்தம் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
keywords: Conflict between the two sides, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.