மனித உரிமை மீறல்களை கண்டித்து லப்பைக்குடிக்காட்டில் தமுமுக ஆா்ப்பாட்டம்.
Condemnation of human rights violations
பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அஸ்ஸாம் மாநில அரசு, பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்தும், அம்மாநிலத்தில் தொடா்ந்து நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் மீரா மொய்தீன் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டத் தலைவா் சுல்தான் மொய்தீன், மாவட்டத் துணைத் தலைவா் முகமது இலியாஸ், மாவட்டப் பொருளாளா் முகமது இலியாஸ் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ஹயாத் பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இஸ்லாமிய பிரசாரப் பேரவையின் மாவட்டச் செயலா் அப்துல் முக்கதீம், தமுமுக உலமா அணிச் செயலா் அபுபக்கா் பாக்கவி ஆகியோா் பேசினா். முன்னதாக, நகரச் செயலா் ஜாவித் வரவேற்றாா். நிறைவில், நகரத் தலைவா் அப்துல் கபாா் நன்றி கூறினாா்.
தினமணி
Keywords: Perambalur District News, Perambalur Mavattam, Perambalur Seithigal, human rights violations, Condemnation,
You must log in to post a comment.