farmer death

மங்களமேட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலி.

346

மங்களமேட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலி. 

College student killed in car accident in Mangalamedu.

திருச்சி மாவட்டம் புறத்தாகுடியை சேர்ந்த ராஜ்கபூரின் மகன் ஆதிம்பாரிக்(வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே கல்லூரியில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் ஹரிஷ்(வயது 20), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆகாஷ்ராம்(20), கள்ளக்குறிச்சியை சேர்ந்த மனோகரன் மகன் அஸ்வின்(20), திருச்சி தில்லைநகரை சேர்ந்த அட்சயராஜா(20) ஆகியோரும் படித்து வருகின்றனர்.

இதில் ஹரிஷ், ஆகாஷ்ராம், அஸ்வின் ஆகியோர் தனியார் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வருகின்றனர்.

சாவு

இந்நிலையில் அஸ்வினின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்ப்பதற்காக ஆதிம்பாரிக் உள்ளிட்ட 5 பேரும் ஒரு காரில் கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை அஸ்வின் ஓட்டினார். மங்களமேடு போலீஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென கார் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆதிம்பாரிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார், படுகாயமடைந்த 4 மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆதிம்பாரிக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Keywords: College student killed, Perambalur News,




Leave a Reply

%d bloggers like this: