அரசு பேருந்து கண்டக்டர் நெஞ்சுவலியால் மரணம்

குன்னம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை.

458

குன்னம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை. College student commits suicide.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காடூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் ஆர்த்தி (வயது 19). இவர் வேப்பூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் ஆர்த்தி, தனக்கு தற்போது திருமணம் செய்ய விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய அவரை தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

வருடம் முழுவதும் வறண்ட நிலத்திலும் நீர், போர் அமைத்துத் தரப்படும்

15 ஆயிரம் ரூபாயில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க்.

இதில் மனமுடைந்த ஆர்த்தி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகிய ஆர்த்தியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

keywords: College student, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: