பெரம்பலூரில் பண மோசடி வழக்கில் கல்லூரி தாளாளர் கைது.
College Principal in Perambalur arrested for money laundering.
பண மோசடி வழக்கில் கல்லூரி தாளாளார் உட்பட இரண்டு பேர் கைது. மேலும் மோசடியில் தொடர்புள்ள பெண்ணுக்கு வலை.
பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் ரவிச்சந்திரன். 50 வயதான இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது நண்பர் நிக்கல்சன். 40 வயதான இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தாளாளராக இருக்கிறார்.
இவரும் பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த சுஜாதா ஆகிய இருவரும் எசனை பாப்பாங்கரையை சேர்ந்த ராமசாமி மகன் சுரேஷ் என்பவரை ரவிச்சந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ரவிச்சந்திரனிடம் ஒரு கிலோ தங்க நகை ரூ38 லட்சத்திற்கு வாங்கி தருகிறேன். இதன் மூலம் ரூ. 5 லட்சம் லாபம் கிடைக்கும் என சுரேஷ் கூறியுள்ளார். இதனை நம்பிய ரவிச்சந்திரன் முன்பணமாக ரூ.18 லட்சம் ரொக்கப்பணத்தை சுரேஷிடம் கொடுத்துள்ளார். மேலும் இரண்டு லட்சத்தை சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு ரவிச்சந்திரம் மாற்றம் செய்துள்ளார்.
Perambalur News:
- பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதல் பலி.
- முழு பொது முடக்கம் : வெறிச்சோடிய பெரம்பலூர் நகரம்
- பாடாலூர் அருகே சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ரவிச்சந்திரனுக்கு போன் செய்து நீ கொடுத்த பணத்தில் ரூ.2.82 லட்சத்திற்கான பணம் கள்ள நோட்டாக உள்ளதால் உடனே ரூ. 2 லட்சத்தை எனது வங்கிக் கணக்கிற்கு மீண்டும் அனுப்ப வேண்டும், அதை வைத்து சரி செய்து கொள்கிறேன். இல்லாவிட்டால் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் சிக்கி பிரச்சனையாகிவிடும் என சுரேஷ் கூறியுள்ளார்.
இதையடுத்து ரவிச்சந்திரன் உடனே 2 லட்சம் பணத்தை சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் ஒரு கிலோ தங்க நகை ரூ.52 லட்சத்து 50ஆயிரமாகும். ஆகையால் நீ கொடுத்த 20 லட்சம் போக மீதமுள்ள ரூ.32.50 லட்சம் பணத்தை நீ எனக்கு தரவேண்டும் என ரவிச்சந்திரனிடம் சுரேஷ் கூறியுள்ளார். இதற்கு ரவிச்சந்திரன் பணம் தர முடியாது, எனக்கு நகையே வேண்டாம். நான் கொடுத்த ரூ22 லட்சம் பணத்தை திருப்பி கொடு என சுரேஷிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு சுரேஷ் நீ என்னிடம் கொடுத்த பணத்திற்கு ஆதாரம் இல்லை, பணம் தர முடியாது எனக்கூறி கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.
Tamil News:
- வழிபாட்டுத் தலங்களில் விதிமுறைகளை கடைப்பிடிக்க ஆட்சியா் வலியுறுத்தல்.
- 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தாத்தா! குடிகார தந்தையும் கைது.
இதனால் பணம் தர மறுத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்த சுரேஷ் மற்றும் நிக்கல்சன், சுஜாதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தனது 22 லட்சம் பணத்தை பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரவிச்சந்திரன் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் காவல் ஆய்வாளர் சுப்பையா, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் நிக்கல்சன், சுரேஷ் ஆகிய 2 பேரை நேற்று கொலை மிரட்ல் மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுஜாதா என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
You must log in to post a comment.