மீண்டும் அஜித்துடன் இணையும் விஷ்ணுவர்தன்!

227

மீண்டும் அஜித்துடன் இணையும் விஷ்ணுவர்தன்!.

நடிகர் அஜித் தனது 60வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று முழுமையாக நீங்கும் வரை படம் தொடர்பான வேலைகளை தொடங்க வேண்டாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் சென்னையில் வீட்டில் இருக்கும் அஜித் தனது அடுத்தப் படத்திற்கான கதைக் கேட்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.

அஜித்தின் குட்புக்கில் இடம்பெற்ற இயக்குனர் விஷ்ணுவர்தன், தொலைப்பேசி மூலம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதை அஜித்துக்கு பிடித்து இருக்கிறதாம். எனவே அஜித் – விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். அஜித்தின் திரை வாழ்வில், பில்லா மிக முக்கியமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

%d bloggers like this: