Police seize bottles of wine from famous actress's car

பிரபல நடிகையின் காரிலிருந்து மது பாட்டில்கள் பறிமுதல்.

207

பிரபல நடிகையின் காரிலிருந்து மது பாட்டில்கள் பறிமுதல். Police seize bottles of wine from famous actress’s car

தமிழ் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன். இவரின் காரில் மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில்  மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி  அளித்துள்ளது.

சென்னையில் தினமும் கொரோனா தொற்றினார் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. இதனால் வெளி மாவட்டங்களிலிருந்து மதுபானம் வாங்கி வருவதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர்  சோதனைச் செய்து வருகின்றனர்.

[the_ad id=”7251″]

இந்நிலையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் முடுக்காட்டில் உள்ள சோதனைச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கானத்தூர் காவல்துறையினர், அவ்வழியே வந்த இனோவா வாகனத்தை மறித்து சோதனை செய்யதனர். அந்தக் இன்னோவா காரில், நடிகை ரம்யாகிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருவரும் சோதனை செய்ய அனுமதியளித்துள்ளதாக தெரிகிறது.

காவல்துறையினரின் சோதனையில் 96க்கும் அதிகமான பீர்பாட்டில்கள், 8 மதுபாட்டில்கள் இருந்தததை கண்டனர். இதுகுறித்து வானத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் செல்வகுமார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பிறகு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருவரும் செல்வக்குமாரை ஜாமீனில் அழைத்துச் சென்றதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: