ஹாலிவுட்டின் மூத்த நடிகர் கிர்க் டக்ளஸ் மரணம்.

66

ஹாலிவுட்டின் மூத்த நடிகர் கிர்க் டக்ளஸ் மரணம்.

[the_ad id=”7250″]

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான 103 வயது கிர்க் டக்ளஸ் மரணமடைந்தார்.

’தி ஸ்ட்ரேஞ் லவ் ஆஃப் மார்த்தா இவர்ஸ்’ என்ற திரைப்படத்தில் 1946ஆம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கிர்க் டக்ளஸ் இதுவரை 90க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

1949-ம் ஆண்டு இவர் நடித்த சாம்பியன், 1960-ல் ஸ்பார்டகஸ், 1956-ல் லஸ்ட் ஃபார் லைஃப் ஆகிய படங்கள் இவரது திரையுலக பயணத்தில் சிறந்த படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ’சாம்பியன்’ படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது சிறப்பு. இவரது கம்பீரமான உடற்தோற்றம் ஹாலிவுட் ரசிகர்களால் மறக்கமுடியாதவை.

[the_ad id=”7251″]

ஹாலிவுட் ஜாம்பவான் இயக்குநர்களான பில்லி வில்டெர் முதல் ஸடான்லி குப்ரிக் வரை அனைத்து இயக்குநர்களின் படங்களிலும் நடித்துவிட்ட கிர்க் டக்ளஸுக்கு 1996ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. மூன்று முறை ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டக்ளஸ் நேற்று (05.02.2020) கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: