விஜய்யின் வளர்ச்சியை  பாராட்டிய பாரதிராஜா

விஜய்யின் வளர்ச்சியை  பாராட்டிய பாரதிராஜா!

218

விஜய்யின் வளர்ச்சியை  பாராட்டிய பாரதிராஜா!!

நடிகர் விஜய்யின் வளர்ச்சியினை பிரபல இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.

Popular director Bharathiraja has praised the development of actor Vijay.

நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது திரைப்படங்கள் தமிழ் நாட்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டாலும், அதே அளவு மற்ற தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.

விஜய் பிறந்தநாளுக்காக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பிகில் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருப்பதே இதற்கு ஒரு உதாரணம்.

விஜய்க்கு சினிமாத் துறையில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருக்கின்றனர். அவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என காத்திருக்கும் நடிகர்கள் ஏராளம். நடிகைகள் பலரும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை என வெளிப்படையாகவே கூறியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா, தான் விஜயுடன் பணியாற்றாமல் போனது பற்றி வருத்தத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் விஜய்யின் நடிப்பு திறமை, சினிமாவில் அசுர வளர்ச்சி என பல விஷயங்களைக் குறிப்பிட்டு அவரைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது..

“என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின்இளைஞர்களின், சொத்தாக உலகமே,கொண்டாப்படும் “விஜய்க்கு” @actorvijay இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி,நக்கலுக்கான அந்த, உடல் பாவனை, நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கனக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில், எல்லா சிறப்பும் பெற்று, நீடூழி வாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன் அன்புடன் பாரதிராஜா” என கூறியுள்ளார் பாரதி ராஜா.

tag: tamil cinema news, actor vijay
Leave a Reply

%d bloggers like this: