விஜயின் ‘சுறா’ திரைப்படம் கேரளாவில் மறு வெளியீடு.

178

விஜயின் ‘சுறா’ திரைப்படம் கேரளாவில் மறு வெளியீடு.

விஜய், தமன்னா மற்றும் வடிவேலு நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான ‘சுறா’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கேரள விஜய் ரசிகர்கள், கொல்லம் பகுதியில் இருக்கும் ஜி-மேக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் வெளியிடுகின்றனர். இம்மாதம் 26-ஆம் தேதி (குடியரசு தினத்தன்று) வெளியாகவுள்ள நிலையில், கேரளா விஜய் ரசிகர்கள் மிக உற்சாகமாக டிக்கட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

தளபதி விஜய்க்கு இந்த திரைப்படம் முதல் மறு வெளியீடாகும். டிக்கட்டுகள் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தொலைப்பேசி எண்களை குறிப்பிட்டு, கேரளாவில் கொல்லம் நன்பன்ஸ் (விஜய் ரசிகர்கள் குழு) ட்வீட்டை வெளியிட்டுள்ளது.

‘சுறா’ திரைப்படம் 2010-ஆம் ஆண்டு, ஏப்ரல் 30-ஆம் தேதி உலகளவில் வெளியானது. இப்படம் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில், சங்கிலி முருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டது. இப்படத்துக்கு மணி சர்மா இசையமைத்திருந்தார்.
Leave a Reply

%d bloggers like this: