‘மாஸ்டர்’ மிரட்டும் மூன்றாவது லுக்

94

‘மாஸ்டர்’ மிரட்டும் மூன்றாவது லுக்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என நடிகர் பட்டாளமே நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

[the_ad id=”7251″]

இதையடுத்து, ரசிகர்களுக்கான புத்தாண்டு பரிசாக தளபதி-64 என தற்காலிகமாகக் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் படத்துக்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டது.

இதையடுத்து, பொங்கல் பரிசாக மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு கடந்த 15-ஆம் தேதி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் மூன்றாவது லுக் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியாகும் என படக் குழு நேற்று அறிவித்தது. இதன்படி, இது தற்போது வெளியாகியுள்ளது.

[the_ad id=”7251″]

முதல் இரண்டு போஸ்டர்களில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது லுக்கில் விஜய் சேதுபதியும் இடம்பெற்றுள்ளார். இதன் ஒரு பக்கத்தில் விஜய்யும், மற்றொரு பக்கத்தில் விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெளியானதையடுத்து, மாஸ்டர் மூன்றாவது லுக் எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”12149″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: